டிஜிட்டல் முறையில் தேசிய அடையாள அட்டையை பரிசீலிப்பதற்காக ஆட் பதிவுத் திணைக்களத்துடன் SLT-MOBITEL உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் நவீன டிஜிட்டல் தீர்வுகளை மாற்றியமைப்பதில் தேசிய
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, ஆட் பதிவுத்
திணைக்களத்துடன் கைகோர்த்து, இலங்கையின் தொலைத் தொடர்பாடல் வரலாற்றில்
முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக, SLT-MOBITEL இடமிருந்து வாடிக்கையாளர்கள் சேவைகளைப்
பெற்றுக் கொள்ளும் போது டிஜிட்டல் முறையில் தேசிய அடையாள அட்டையை பரிசீலித்து
உறுதி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆளுநர் நாயகம் வியானி குணதிலக மற்றும் மொபிடெல் பிரைவட்
லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென ஆகியோரிடையே இந்த புரிந்துணர்வு
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களையும் சேர்ந்த சிரேஷ்ட
அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆட் பதிவுத் திணைக்களத்துடனான SLT-MOBITEL’இன் பங்காண்மையினூடாக, வங்கிகள் மற்றும்
நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் தேசிய அடையாள
அட்டை பரிசீலிக்கும் வசதி தற்போது அதன் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, உறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளர்
அறிந்திருப்பு தகவல்களை பெற்றிருப்பதை SLT-MOBITEL உறுதி செய்கின்றது. நிறுவனத்தினால்
புதிய இணைப்புகள் மற்றும் இதர சேவைகள் வழங்கப்படும் போது, மோசடிகள் மற்றும் குற்றச்
செயல்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை உதவியாக அமைந்திருக்கும்
என்பதுடன் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவியாக அமைந்திருக்கும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்புத்
தீர்வுகளை வழங்கி தேசத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளை முன்னெடுப்பதில், தேசிய
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநர் எனும் வகையில், SLT-MOBITEL இனால்
அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரரென, ஆட்பதிவுத்
திணைக்களத்தின் ஆளுநர் நாயகம் வியானி குணதிலக உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை
கைமாற்றிக் கொள்வதையும், அருகாமையில், மொபிடெல் சார்பாக தயாரிப்புகள் தலைமை
அதிகாரி ஷியாங் வொங்க, பிராந்திய தலைமை அதிகாரி தென்ஹம் பெரேரா, நுகர்வோர்
விற்பனைகளுக்கான பொது முகாமையாளர் சுகத் அபேசிங்க, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி
சஷிக செனரத் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் சார்பாக மேலதிக ஆளுநர் நாயகம்,
ஆர்.எல்.எஸ்.பி. சுவர்ணலதா (இடமிருந்து இரண்டாமவர்), பிரதன கணக்காளர், எல். எம்.
தெனவக, செயற்பாடுகளுக்கான ஆளுநர் ரித்ம புளத்சிங்கள, அபிவிருத்தி, ஆய்வுகள் மற்றும்
தகவல் தொழில்நுட்பம் ஆளுநர் எச்.எம்.ஐ.கே. ஹேரத் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதி
ஆளுநர் எரந்தி வீரசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *