நிலையான மற்றும் மொபைல் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக கட்டணப்
பட்டியல் கட்டணங்களை செலுத்துவது மற்றும் ரீலோட்களை மேற்கொள்வதை
கௌரவிக்கும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள்
வழங்குநரான SLT-MOBITEL முன்னெடுத்திருந்த Laptop Fiesta நிகழ்ச்சித் திட்டத்தின்
வெற்றியாளர்களுக்கு மடிக் கணனிகளை அன்பளிப்புச் செய்திருந்தது.
டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் வகையிலும், மாணவர்கள்,
தொழில்முயற்சியாளர்கள், சிறியளவிலான வியாபாரங்கள் மற்றும் அறிவை
நாடுவோருக்கு டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வகையிலும் Laptop Fiesta
நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியினூடாக நிலையான மற்றும் மொபைல் வாடிக்கையாளர்கள் வருடம்
முழுவதிலும் கட்டணப் பட்டியல்கள் கொடுப்பனவுகள் மற்றும் ரீலோட்களை
மேற்கொள்கின்றமைக்காக, மடிக் கணனியை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு
வழங்கப்படுகின்றது.