இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஜப்பானில் ஒடோ மொபைல் துறையில் அதிக தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக ஒட்டோ மொபைல் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும் அங்கு பயிற்சி பெறும் பயிலுநர்களுக்கு ஜப்பானில் நேரடியாகவே தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்திப்பதற்கு வந்திருந்த ஜப்பானிய உயர்மட்ட இராஜதந்திர பிரதிநிதிகள் குழு இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தது.
ஜப்பானின் அமைச்சரவை அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் FUJIMARU Satoshi, சனத்தொகை சரிவை வெற்றிகொள்ளல் மற்றும் உள்ளூர் பொருளாதார மறுமலர்ச்சி ஊக்குவிப்பு தொடர்பான முன்னாள் இராஜாங்க அமைச்சர் YAMAMOTO Kozo ஆகியோர் தலைமையிலான ஜப்பான் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) காலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் சந்தித்ததுடன் இதன்போது ஜப்பான் பிரதிநிதிகள் குழு இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தினர்.
ஒடோ மொபைல் துறையில் தொழில் வாய்ப்பை இலக்குவைத்து அமைக்க இருக்கும் இந்த தொழில் பயிற்சி நிலையம், அரச மற்றும் தனியார் துறையின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக ஆரம்பிப்பதற்கு இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆதரவை அதற்காக வழங்குவதற்கும் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் இணக்கப்பாட்டை தெரிவித்தார். இந்த தொழில் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அங்கு பயிற்சி பெறும் அனைவரும் ஜப்பானில் நேரடியாகவே தொழில் வாய்ப்புகளை திறந்துவிடுவதற்கு இருக்கும் சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஜப்பான் பிரதிநிதிகள் குழு தெளிவுபடுத்தியது.
எதிர்வரும் வருடங்களில் ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் 65இலட்சம் பேரை இணைத்துக்கொள்ளும் தேவை இருந்து வருவதுடன், அந்த தொழிலாளர்களின் கோரிக்கை பூரணப்படுத்துவதற்காக இலங்கை தொழிலாளர்களின் பங்களிப்பை எவ்வாறு வழங்க முடியும் என்பது தொடர்பாக இதன்போது நீண்ட நேரம் கருத்து பரிமாறப்பட்டது.
ஜப்பானுக்கு தொழிலாளர்களை அனுப்பும் எஸ்.எஸ்.டபிள்யூ. திட்டத்தின் கீழ் இலங்கை தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும், அதற்காக ஜப்பானிடமிருந்து கிடைக்கவேண்டிய முடியுமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்த பிரதிநிதிகள் குழு இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியது.
ஜப்பானில் தற்போது முதியோர்களின் சனத்தொகை உயர்ந்த நிலையில் இருப்பதால் வெளிநாடுகளின் தொழிலாளர்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடியதுடன் அதிகமாக இலங்கை தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதற்கு ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் இருந்துவரும் நெருக்கமான கலாசாரம் மற்றும் மத ரீதியான தொடர்புகள் காரணமாக அதிகமான இலங்கை தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதற்கு அதிக விருப்பம் இருப்பதாக ஜப்பான் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதன் பிரகாரம் தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளுக்கு மத்தியில் ஜப்பானுக்கு முதலாவதாக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை தனது நேரடி தலையீட்டின் மூலம் தயார் படுத்தி இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெளிவுபடுத்தினார்.
பாடசாலை படநெறிக்கு ஜப்பான் மொழியை உள்வாங்குவதற்கு தான் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவனத்தினால் அந்த பிரேரணையை செயற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் மூலம் 5ஆயிரம் பேருக்கு ஜப்பான் மொழி பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த தினம் இடம்பெற்ற ஜப்பான் மொழி தேர்ச்சி பரீட்சையில் 17ஆயிரம் பேர் தோற்றியிருந்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எஸ்.எஸ் டபிள்யூ திட்டத்தின் கீழ் ஜப்பானுக்கு தொழிலாளர்கள் இணைத்துக்கொள்ளப்படும் 14 துறைகளில் 3 துறைகள் இலங்கை தாெழிலாளர்களுக்கு திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஏனைய துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களுக்காக இலங்கைகயர்களுக்கு விரைவாக திறந்து தருமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிரகாரம் ஒட்டோ மொபைல் துறையில் தொழில் வாய்ப்புக்களை திறந்து விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தனது ஜப்பான் விஜயத்தின்போது கோஜோ நகர் மற்றும் காலி நகரை சகோரத நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாகவும் ஜப்பான் சுற்றுலா பயணிகளை அதிகமாக இந்த நாட்டுக்கு ஈர்ப்பதற்கான ‘விசிட் கோல்’ வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஜப்பான் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பிப்பதற்கு முடியுமான சாத்தியக்கூறு தொடர்பாக கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஜப்பான் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
பொருளாதார ரீதியில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் தொடர்பாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் ஜப்பான் பிரதிநிகளுக்கு தனது நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்த நாட்டின் ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki, சனத்தொகை சரிவை வெற்றிகொள்ளல் மற்றும் உள்ளூர் பொருளாதார மறுமலர்ச்சி ஊக்குவிப்பு தொடர்பான முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் HIROSE Takayuki உட்பட ஜப்பான் தூதுதரகத்தின் பிரிதிநிதிகளும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ. விமலவீர உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.