குளத்தில் நீராட சென்ற மாணவர்களுடன் ஆசிரியர் உயிரிழப்பு

குளத்தில் நீராட சென்ற பொழுது தனது மாணவர்களுடன் இறந்து விட்டான் எங்களது ஆசிரியர் நண்பன்!

களுமுந்தல்வெளியில் இருந்து வர்த்தகம் படிக்க இவன் வந்தபொழுது அறிமுகமானவன் !

களுமுந்தல்வெளியில் இருந்து முதல் வருடம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து களுவாஞ்சிகுடிக்கு வருவான்!

அனைவரையும் நண்பன் என்று கூறியே அழைப்பான்!

எதுவித கல்வி புலமும் இன்றி A/L பரீட்சையில் வர்த்தக பிரிவில் 2A B என்ற பெறுபேறுனை பெற்று தென் கிழக்கு பல்கலைக்கழகம் சென்றவன்!

கடின உழைப்பாளி ! வயல் வேலை முதல் வானொலி அறிவிப்பாளர் வரை! அனைத்தும் தெரிந்தவன்!

தனது கடின முயற்சியால் ஜேர்மன் தமிழ் வானொலி என்ற online வானொலி ஒன்றினை ஆரம்பித்து தனது வசிக குரலால் அனைவரையும் கட்டி போட்டவன்!

குடும்பத்தின் முதல் மகனாக பிறந்து தனது தம்பி தங்கைகளை நல்ல நிலைக்கு ஒப்பேற்றியவன்!

ஆசிரியராக தனது கடமையை மாணவர்களோடு முடித்து கொண்டுள்ளான்!

உனது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருளிப்பார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *