தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பின் போது அந்த திணைக்களத்தின் பிரதானி இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க உடன்பாடு தெரிவித்துள்ளரர்.
கொரிய மொழி ஆற்றலைக்கொண்டு அதாவது தற்போது இணைய தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள தயாரிப்பு பிரிவில் 600 பேரை ,கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிப்புத் துறைகளில் தொழில் வாய்ப்பு எதிர்பார்ப்பில் இணையத்தளத்தில் பதிவை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் தொழிலுக்காக மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பிட்ட இணைதள பதிவு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்பதினால் , இதற்கு முன்னர் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்தவருடம் முதல் E9 விசா பிரிவில் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் தொழிலாளர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு வெல்டர்ஸ் ,பெயிண்டர்கள் ஆக 900 பேர் வேலைவாய்ப்புகளில் இணைத்துக்கொள்வதற்கு ,கொரிய மனித வள திணைக்களம் உடன்பட்டுள்ளது.
கொரிய மொழித் தேர்ச்சிக்காக தற்போது நடத்தப்படும் கனணி அடிப்படையிலான CBT தேர்வுக்கு பதிலாக UBT முறை ஊடாக நடத்துவதற்கு கொரிய மனித வள திணைக்களம் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.