தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
“சர்வதேச தரத்திலான சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்த மறுசீரமைப்பு விடயங்கள் அமைய வேண்டும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியும் ,தொழில் சட்டம் ,தொழில்துறை உறவு மற்றும் தொழில்வாய்ப்பு ஆலாசகருமான திரு. கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார்.
தற்போதுள்ள தொழில் சட்ட மறுசீரமைப்புக்கான கலந்தாய்வுக் குழு கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று (10) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. கனிஷ்க வீரசிங்க மேலும் தெரிவிக்கையில், ‘தற்போதைய தொழில் சட்டத்தின் நடைமுறையில் முரண்பாடுகள் உண்டு அழுத்தங்களும் உண்டு. நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் தொழிலாளர் அதன் பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். தொழில் பிரச்சிகளுக்கு தீர்வு காண்பதில் நீடகாலம் செல்வதாக எமது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை சரி செய்யப்பட வேண்டும் இளம் சமூகத்தினருக்கு தமது எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். அவர்களுக்கான தொழில்வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் இதற்கென தேசிய தொழில் வாய்ப்பு வங்கி ,தற்காலிகமானது அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார உரையாற்றுகையில் சமகால அரசாங்கத்தின் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான 2048 ஆண்டில் வெற்றிபெறுவோம் குறித்த முதனிலை உருவரை ஆவணம் ஜனாதிபதியினால் இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
இன்றைய அமர்வில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. கனிஷ்க வீரசிங்க, இலங்கை தொழில் நுட்ப மென்பொருள் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் திரு.சானக்க பெர்ணான்டோ பெருந்தோட்டத்துறை தொழில் சங்கங்க கூட்டமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் திரு.எஸ். முருகையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
![](https://suratha.lk/wp-content/uploads/2023/05/BASL-2-1024x639.jpeg)
![](https://suratha.lk/wp-content/uploads/2023/05/BASL-3-1024x582.jpeg)