மத ஒற்றுமையை சீர்குலைப்பவர்களுக்கு இடமில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

  • அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி கடுமையான சட்ட அமலாக்கம்

நாட்டில் மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயட்சித்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.  பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக முகம்கொடுத்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில், நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தட்சமயம் காணக்கூடியதாக உள்ளது, எனவே இவ்வாறான சந்தர்பத்தில் நாட்டில் மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயட்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆரோக்கியமான சமூகமொன்றுக்கு மத ஸ்திரத்தன்மையை பேணுவதன் அவசியத்தையும்  இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார் .

கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனி நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ மதவாத  உணர்வுகளைத் தூண்டுவதற்கு அல்லது அதே நோக்கத்துடன் செயல்பட முயற்சித்தால் அவர்களுக்கெதிராக, அரசியலமைப்பின் 9 சரத்து மற்றும் தண்டனைச் சட்டத்தின் 291 (අ), (ආ) இன் பிரகாரம் கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *