கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இன்று(15.07.2023) இடம்பெற்றுள்ளது.
பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.