நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது.
மத்திய மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 296 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.