கிழக்கு லிபியாவை தாக்கிய ‘டேனியல்’ சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 5,300ஐ தாண்டியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கிழக்கு லிபியாவின் முக்கிய நகரமான டெர்னா முற்றிலுமாக அழிந்துள்ளது, மேலும், சூறாவளியின் தாக்கத்தில் இரண்டு பெரிய அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிழக்கு லிபியாவில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன, இதுவரை சுமார் பத்தாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.