தற்போதைய உலகளாவிய காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதில் பலதரப்பு கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை அதன்போது எடுத்துரைத்த மாண்புமிகு அமைச்சர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் COP 27 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தது போன்று காலநிலை நீதிக்கான OPEC அமைப்பை ஒத்த காலநிலை நீதி மன்றத்தை நிறுவவும், உலகளாவிய தெற்கில் காலநிலை பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளரும் தேசங்களின் மேம்பாட்டிற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார். மேலும் மாண்புமிகு அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை நீதியை அடைவதற்கான பாதையில் அதிக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் காலநிலை நீதி மன்றத்தின் நிறுவனப் பிரிவாக ஒரு புதிய 100% காலநிலை நிதி மற்றும் பசுமை மாற்றம் உலகளாவிய தெற்கிற்கான MDB ஐ மையமாகக் கொண்ட ஒரு உயிர்க்கோள கையிருப்பு சேமிப்பகத்தின் தேவை குறித்தும் தனது உரையின்போது வலியுறுத்தினார்.