தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14.10.2023) காலை 7 .15 மணிக்குத் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நேற்று வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த திகதி மீண்டும் மாற்றப்பட்டு நாளை சனிக்கிழமை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மத்திய அமைச்சர்கள் கூடுதலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் இந்தத் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது எனக் கூறப்படுகின்றது.