மேல்நாட்டு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டதால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புகையிரதம் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ நிலையங்களுக்கு இடையில் காலை 10.15 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதே புகையிரதம் நேற்று தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாகவும், ஐந்து மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் அது தனது இலக்கை அடைந்ததாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.