07 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 07 நாடுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.