பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நிறுவனங்களில் நியமனங்களை வழங்கவும்.

இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நியமனத்தை துரிதப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (.2023.10.25) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், அரசாங்க ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது அரச சேவையில் உள்ள ஆரம்ப சேவை வெற்றிடங்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ள போதிலும் சில அமைச்சுக்களில் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக 4780 பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு இன்னும் நியமனம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்படி, இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்களை வழங்கி அவர்களை உரிய இடங்களுக்கு இணைப்புச்செய்யுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *