உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை இன்றைய போட்டியில் இலங்கை அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களால் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமற்போனது.
இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 5 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியலில் இந்தியா , தென்னாபிரிக்கா , நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தமது அடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இன்றைய வெற்றி மூலம் இலங்கை அணி அரை இறுதிக்கான எதிர்பார்ப்புகளை தக்கவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.