சந்திர கிரகணம்

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 11ம் திகதி (28/10/2023) சனிக்கிழமை இரவு சந்திர கிரகணம் .

       கிரகணம்  ஆரம்பம் --  இரவு 01.05
                               மத்திம்   --  இரவு  01.44
                                முடிவு     -- இரவு   02.02

இந்த சந்திர கிரகணமானது அச்சுவினி நட்சத்திரத்தில் பிடிக்கிறது .மேலும் பரணி,கார்த்திகை 1ம் கால் ,மகம், உத்தரம் 2,3,4 ம் கால்கள் , அத்தம் ,சித்திரை
1,2 ம் கால்கள் ,மூலம் போன்ற எட்டு நட்சத்திரங்களுக்கு தோஷமாகும்.

கிரகண நேரத்திற்கு முன்னதாக உணவுப் பொருட்கள் , குடிநீர் முதலான பாத்திரங்களில் தர்ப்பையை மேலே போட்டு வைக்க வேண்டும். தர்ப்பை புல்லுக்கு கிரகண சக்தி , தீய சக்திகள் போன்றவற்றை எதிர்க்கும் சக்தி உண்டு.

மற்றும் கிரகண நேரத்தில் கர்ப்பினிகள், வயதானவர்கள் , உடல் நலமில்லாதவர்கள் வெளியே செல்லாமல் இருப்பது அவசியம்.

கிரகணம் முடிந்ததும் வீட்டை தண்ணீர் விட்டு துடைக்க வேண்டும் . பிறகு வீட்டில் விளக்கேற்றி பூஜை வழிபாடுகள் செய்யவும்
தோச நட்சத்திரகாரர்கள் ஞயிற்றுக்கிழமை காலையில் கோயிலுக்கு சென்று வழிபாடுகள் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *