2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் டொலர்களுக்கு மேல் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளிப்படுத்தியுள்ளது.
2023 இல் இதுவரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.1 மில்லியனைத் தாண்டியுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த வருடத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிகமானதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
செப்டம்பர் வருவாய் $152.2 மில்லியனாக இருந்தது, ஆனால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து 28% சரிவைக் கண்டது.