முழு உலகிலும் தீமைகள் எனும் அந்தகாரத்தை அகற்றி நன்மைகள் எனும் ஒளியைப் பரவச்செய்யும் உயர்ந்த நோக்குடன் உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தீபங்களை ஏற்றி தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
“ஆன்மீக இருளுக்கு எதிராக ஞான ஒளியையும், தீமைக்கு எதிராக நன்மையையும் அறியாமைக்கு எதிராக அறிவையும்” வெற்றிகொள்வதை குறிக்கும் தீபத் திருநாள் தீபாவளியை அர்த்தப்படுத்தும் வகையில், அனைவருக்கும் அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான பிரார்த்தனையுடன் பொது ஆன்மீக வெற்றிகளுக்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதிபூணுவோம்.
தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு