நாடளாவிய ரீதியில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாழடைந்த கட்டிடங்களும் அடையாளம் காணப்பட்டு அவை அகற்றப்பட்டு புதிய நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தமது பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறான கட்டடங்களில் இருந்து மாணவர்களை வெளியேற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஏறாவூர் அப்துல் அஸீஸ்