( SURATHA NEWS READER AKM MUKSITH KINNIYA )
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று வரை 19 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் (Richard Marles) நேரில் காண பார்வையிட உள்ளமையினால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதுடன்,
உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது
மாபெரும் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பெட் கமிஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.