71 வயதில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர் அகிலா திருநாயகி

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான அகிலா திருநாயகி அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அகிலா திருநாயகி 1500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இவர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவது இடத்தையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. சோதனைகளை சாதனைகளாக்க வயது ஒரு தடையல்ல, என்பதை நம் குல பெண்களுக்கு தன் வெற்றி மூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் அகிலா திருநாயகி அவர்களை வாழும் போதே வாழ்த்துவோம் வாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *