வடமேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வடமேல் மாகாண முதியோர் சங்கமும் இணைந்து நாடாத்தும் சமாதானத்திற்கான ஆன்மீக யாத்திரை (உறவுப்பாலம்) நேற்று (2023.11.29) வவுனியாவை வந்தடைந்தது.
வவுனியா மாவட்டத்தில் முதியோருக்கான குறித்த நிகழ்வினை மாவட்ட செயலகமும், மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து எற்பாடு செய்திருந்தது.
குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், வடமேல் மாகாண முதியோர் சங்க தலைவர்,
வவுனியா மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட முதியோர் சங்க தலைவர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனார்.
முதியவர்களால் கலை நிகழ்வுகள் பல நிகழ்த்தப்பட்டன. நடனம், நாடகம், பாடல்கள் என பல இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது சுரத்த தமிழ் செய்திபிரிவிற்காக செட்டிகுளத்தில் இருந்து சிவானந்தராசா