பாராளுமன்றத்துக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள சுற்றுவட்டத்தில், ஜே.வி.பியின் மகளிர் அணியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்து கலைத்துள்ளனர்.
இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொல்துவ சந்தியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பெண்கள் அணியினர் மீதே இவ்வாறு தண்ணீரை பீச்சியடித்து கலைத்துள்ளனர். இதனால் கலைந்து சென்ற ஒருசிலர், மீண்டும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.