கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பைகள் வழங்கும் நிகழ்வு கந்தளாய் கல்வி வலயத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
சீனாவின் யுனான் மாகாணத்தில் இயங்கும் “யூனான் மாகாண மக்கள் வெளிநாட்டு நாடுகளுடன் நட்புறவு கொள்வதற்கான சங்கம்” இந்த பாடசாலைப் பைகளை கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் திரு.செந்தில் தொண்டமானிடம் வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கபில அத்துகோரள முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்திலுள்ள 5000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.arm.saheeth