December 14, 2023 தகவல் ஏறாவூர் அப்துல் அஸீஸ் சுரத மீடியா
கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலர் பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை வெட்டிய சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொருவரை தாக்கிவிட்டு சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதுவரை 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரும் தாக்கப்பட்ட நபரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைகள் வெட்டப்பட்ட நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், அம்பாறை தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது , 05 சந்தேக நபர்களையும் அவர்கள் பயணித்த வேனையும் கைது செய்துள்ளனர்.