கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது!

Suratha news reporter Kalimuthu Sathiyaseelan
Cheddikulamகண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது!
கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது!
மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மரணத்தின் பின்னர்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அவருக்கு கொவிட்  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கம்பளை அத்கல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொவிட் நோய்த் தொற்று முடிவுக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர், இலங்கையில் இந்த மரணம் புதிதாக பதிவாகியுள்ளது.  

இதேவேளை, நாட்டில் தற்போது Omicron JA1 வைரஸ் பரவி வருவதை டாக்டர் ஜீவந்தா உறுதிப்படுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *