கடந்த சனிக்கிழமை கொழும்பு15. மிராக்கல் கிட்ஸ் ஆராம்ப பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழா

கொழும்பு 10 மருதானை பஞ்சிகாவத்தை அல் ஹிதாயா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் பிரிவின் ஆலோசகர் திரு. ஹாஷிம் உமர் , திரு.திருமதி வைகுந்தன்,திரு ஜோசப் பெர்னாந்து , சமூக ஆர்வலர் அஷீஸ் லஹானா,திரு. தினேஷ் கனகராஜா,திரு. நடராஜா மணிவண்ணன் , திரு.கேதீஷ்,பிரபல கலைஞர் திரு. ரியாஸ் மற்றும் பிரபல வர்த்தகர் திரு . முகமட் ரபீக் அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பிள்ளைகளுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்கள். அத்துடன் ஆரம்பப் பள்ளி பாடசாலையில் சாம்பியனாக கி.கிருஷ்ணஜாவும் இரண்டாம் இடத்தை யக்‌ஷியாவும் மூன்றாம் இடத்தை ஜெரி அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். அதிபர் ரிஸ்மினா மற்றும் ஆசிரியர்கள் , ஒன்றினைந்து பல்சுவை நிகழ்ச்சிகளையும் வழங்கினார்கள். பெற்றோர்களும் , ஏனையோரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.படங்கள். எம்.நசார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *