மலரும் 2024 வளம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே, பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதியதோர் யுகத்தை உருவாக்கும் சவாலான வேலைத்திட்டத்துடன், ஒழுக்கத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் மதிக்கும் ஒரு சமூகத்தில் சுபீட்சமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் எமது விவசாயிகள் ஆற்றிய சவாலான பணியை இந்த புத்தாண்டில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
புத்தாக்கங்கள் மற்றும் தொழில் முயற்சி சார்ந்த மனப்பான்மையுடன் புதுமையான எண்ணக்கருக்கள் மூலம் புதிய தலைமுறையை வலுவூட்டுவதன் மூலம் நாட்டை உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி முன்கொண்டு செல்வதற்கு உறுதிபூணுவோம்.
கடந்த காலம் எமக்கு பல விடயங்களை சிந்திக்க வைத்துள்ளது. தொற்று நோய்நிலைமைகள், அனர்த்தங்கள், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் போன்றவை அண்மைக்கால வரலாற்றில் நாம் கண்டிராதவையாகும். மீண்டும் அவ்வாறான நெருக்கடி நிலைமைகளுக்கு முகம்கொடுக்காதிருக்க, அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாமல் இருக்க, மலரும் இந்த புத்தாண்டை புதிய சிந்தனைகளுடன் வரவேற்போம்.
தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2023 டிசம்பர் 31