By. K. Sathiyaseelan
குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக இன்று நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.
இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்துகொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் காணி உரிமையாளர்களை கேட்டபோது, 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழம் கொண்ட கிணறு தோண்டி கட்டியுள்ளார்கள்.
தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது முதல் கருநிறத்தில் காணப்பட்ட கிணற்று நீர் பின்னர் மண்ணெண்ணைய் மணக்கத்தொடங்கியுள்ளது கிணற்று நீரின் மேற்படலம் மண்ணெண்ணையாக தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாளியால் தண்ணீரை அள்ளி அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது. அதனை விட மண்ணெண்ணை மணம் வீசுகின்றது.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதுடன் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
பின்னர் கிணற்றினை பார்வையிட்டுள்ளதுடன் கிணற்றின் எண்ணெய் கலந்த நீரின் மாதிரி எடுத்து சென்றுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
காளிமுத்து சத்தியசீலன்
செட்டிகுளம்