( கட்டுரை தகவல் எழுதியவர், காளிமுத்து சத்தியசீலன் )
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த இலங்கை, பல சவால்களுக்கு மத்தியில் 2024ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது.
ஆண்டொன்று முடிவடைந்து, புதிய ஆண்டொன்று பிறக்கும் போது பலர், பல்வேறு சவால்கள் மற்றும் இலக்குகளை கொண்டிருப்பார்கள். குறிப்பாக வீடொன்றை நிர்மாணித்தல், காரொன்றை வாங்குதல் உள்ளிட்ட இலக்குகளை தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.
எனினும், அந்த இலக்கை நோக்கி நகர்வதை விடவும், 2024ம் ஆண்டு தமக்கு கிடைக்கும் வருமானத்தில் அடிப்படை செலவுகளை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்கு, அது இலகுவான விடயமாக இருக்காது. பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு, 2024ம் ஆண்டு மேலும் பிரச்னைகளை எதிர்நோக்கும் ஆண்டாக அமையும் என்பதாகும்.
2022ம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு, ஐ.எம்.எப் கடன் திட்டத்தின் ஊடாக 2023ம் ஆண்டு குறிப்பிடத்தக்களவு நிவாரணம் கிடைத்திருந்தது. நான்கு வருட கடன் திட்டத்தின் கீழ், இரண்டாவது தவணை கடனுதவி இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் என்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும். அந்த பயணம் மிகவும் கடினமானது. சாதாரண மக்களுக்கு பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டி அபாயம் ஏற்படும்