22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

திடீரென அதிகரித்த சிவப்பு சீனியின் விலை

( SURATHA MEDIA Jaffna District Director Suvarna Priya )

சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது
அதன்படி நேற்றிலிருந்து (09) சந்தையில் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெறுமதிசேர் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினாலேயே சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளது.
பெறுமதிசேர் வரி
இலங்கையில், பெல்வத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரமே சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதனால்,

சிவப்பு சீனியின், முந்தைய விலையில் இருந்து பதினெட்டு வீதம் (18%) பெறுமதிசேர் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
வெள்ளை சீனியின் விலை
இவ்வாறிருக்கையில், அதனுடன் வர்த்தகர்கள் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சிவப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபா குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz