ஏறாவூர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இடங்களை மையப்படுத்தி எமது சமூகநலன் அபிவிருத்தி ஒன்றியம் (SWDO) சமைத்த உணவினை 400 குடும்பங்களைச் சேர்ந்த 1225 பேருக்கு இன்று வழங்கி வைத்தது.
அல்ஹம்துலில்லாஹ்…
இன்றைய தினம் (10/01/2024) புதன்கிழமை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சமைத்துக்கொள்ள முடியாத நிலையிலிருந்த வறுமைப்பட்ட மக்களுக்கு எமது அமைப்பின் அங்கத்தவர்கள் நேரடியாகச் சென்று சமைத்த உணவினை வழங்கி வைத்தனர்.
இந்தவகையில் மழை வெள்ளம் பாராது இன்று களத்தில் நின்ற எமது SWDO அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக…
சமைப்பதற்கு இடம் தந்துதவிய தனவந்தருக்கும் இறையருள் கிடைக்கட்டும்.
இப் பணியினைச் செய்வதற்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய சவூதி நாட்டில் பணிபுரியும் சகோதரருக்கும் கட்டார் நாட்டில் தொழிலின் நிமித்தம் சென்று எமது அமைப்புக்கு உதவி வருகின்ற சகோதரர்களுக்கும் குவைட் நாட்டில் பணி புரியும் எமதூர் சகோதரருக்கும் எமதூரைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும் இவர்களது உதவிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கும் அல்லாஹ் அவர்களது வாழ்வில் நிம்மதி, தொழிலில் அபிவிருத்தி, தேக ஆரோக்கியம் போன்றவற்றை வழங்கி அருள் புரியட்டும் ஆமீன்….
” ஏழைகளுக்கு இரங்கிடுவோம்
இறையருளைப் பெற்றிடுவோம் “
நன்றி
SWDO – நிருவாகம்