அரசு ஊழியர்களின் பணி நேரம் குறித்து புதிய சுற்றறிக்கைவி

அரசு ஊழியர்களின் பணி நேரம் குறித்து புதிய சுற்றறிக்கை
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும்.

சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை பொருட்படுத்தாமல் வந்து செல்வதை அவதானித்ததையடுத்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றறிக்கையின்படி, அரசு அலுவலகங்கள் பிற்பகல் 3:00 மணி வரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், சீருடைப் படிகள் பெறும் அனைத்து அரசு அலுவலர்களும் பணிக் காலத்தில் அலுவலக அடையாள அட்டையை அணிந்து, சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை வேளையில் அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் தங்கியிருப்பது அவசியம் என சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *