நேற்று வவுனியாவில் நடைபெற்ற தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும்

தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வின் அடுத்த கட்டமாக, மாணவர்களை நோக்கியதான நிகழ்வாக, தனியார் கல்வி நிலையங்களில் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அந்தவகையில், தமிழ்மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வானது நேற்றைய தினம் 13.01.2024 சனிக்கிழமை வவுனியா வைரவபுளியங்குளம் “அறிவொளி” கல்வி நிலையத்தில் நடைபற்றது. நூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வில் சிரஞ்சீதன் அவர்களால் “சொல்லாததும் உண்மை” நூலினது அனுபவப்பகிர்வும் மற்றும் வினோத் அவர்களால் “ஜெய்பீம்” திரைப்படத்தின் அனுபவப்பகிர்வும் பகிரப்பட்டது.

தனியார் கல்வி நிலைய மாணவர்களுக்கான அடித்தளமாக அமையப்பெற்ற இந்த நிகழ்வினை அறிவொளி கல்வி நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்த அறிவொளி கல்வி நிலைய இயக்குனருக்கும் ஒழுங்குபடுத்திய திருவரங்கன் ஆசிரியர் அவர்களுக்கும் பங்குபற்றிய மாணவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்மாமன்றம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தொட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *