( SURATHA MEDIA Jaffna district director Suvarna priya )
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. விபத்தினால் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் 2024.01.14 நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், உறவினர்களிடம் மரணம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தார்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.