சகல பஸ்களிலும் சிசிடிவி கமராக்கள்.

( SURATHA MEDIA COMPUTER EDITOR MMM. SIRAJIN MUNEER )
KINNIYAஅனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவித்ததன் பின்னர், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் அறிவிக்கப்பட்டு பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கமராக்கள் பொருத்தப்பதுவதன் மூலம் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பான யோசனை பொறுப்பு தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *