( NEWS READING REPORTER AKM. MUKSITH KINNIYA )
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாட்டை வங்குரோத்து செய்த திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, திருடப்பட்ட பணம் நாட்டுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி வாய்ப்பேச்சுக்கு இடமளிக்காது நீதிமன்றத்திற்குச் சென்று கோப்பு மூட்டைகளைக் காட்டி நாட்டை வங்குரோத்து செய்தவர்களின் பெயர்களை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அடுத்த கட்டமாக அடிப்படை உரிமை மனுக்கள் மூலம் வாழ்வாதாரத்தை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ சோமாதேவி பாலிகா வித்தியாலயத்திற்கு 66 ஆவது கட்ட சக்வல வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.