பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கைது செய்ய விஷேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்.
இன்று போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கு சிலர் போர் கொடி தூக்கியுள்ளார்கள். சர்வதேசத்திற்கு கடிதம் எழுதி உள்ளாகள் எந்த எதிர்ப்பு வந்தால் இந்த நடவடிக்கைகளை நாம் நிறுத்தப்போவயில்லை.
இன்று பெண்களுக்கு பஸ்ஸில் செல்ல முடியாத நிலை உள்ளது.பொது இடங்களில் நாம் புலனாய்வு பிரிவினரை இறக்க உள்ளோம். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களில் கழுத்தை பிடிக்க உள்ளோம் என குறிப்பிட்டார்.
NEWS READING REPORTER
AKM. MUKSITH
KINNIYA