Today’s weather forecast

අද කාලගුණය 2024.01.15

නැගෙනහිර සහ දකුණු පළාත්වල සිහින් වැසි ඇති විය හැක. රටේ අනෙකුත් ප්‍රදේශ සාධාරණ කාලගුණයක් අත්විඳිනු ඇත. දිවයිනේ බොහෝ පළාත්වල උදෑසන මීදුම දක්නට ලැබේ.

( ද්‍රවිඩ නිවේදනයේ google translate සිංහල පරිවර්තනයකි.)

இன்றைய வானிலை 2024.01.15

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

நாட்டின் அனேகமான மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் ஹமபாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *