சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது.

( SURATHA MEDIA – COMPUTER EDITOR MMM. SIRAJIN MUNEER KINNIYA )

மன்னார் – ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (17.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 4 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 968 கடலட்டைகள், 34 சங்குகளும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 தொடக்கம் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சங்குகள் ஏல விற்பனை ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

…..:::;~~~;:::…..
SURATHA MEDIA🇱🇰🇱🇰🇱🇰
COMPUTER EDITOR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *