( Suratha Media Reporter, A.W. Farees Trincomale District )
சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான அடிப்படையில்உருவாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலையமைப்பின் முதற் கட்டமாக செயல்படுத்தப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு மூலம் தற்போது பயனடையும் அனைத்து பயனாளிகளுக்கும் ஜனவரி முதல் வங்கிக் கணக்குகள் மூலம் பணம் பெற்றுக்கொள்ளத் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
தற்போது தேசிய அடையாள அட்டையினைப் பெறாத சகல பயனாளிகளும் தமக்கு உரித்தான பிரதேச செயலகத்திற்கு செல்லவும். “அஸ்வெசும” பயனாளிகளுக்கான முன்னுரிமை வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு வாரங்களுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, சமூக பாதுகாப்பு தகவல் அமைப்பில் புதிய விண்ணப்பதாரர்களைப் பதிவு செய்யும் போது தேசிய அடையாள அட்டையை கட்டாயமாக்க நலன்புரி நன்மைகள் சபை முடிவு செய்துள்ளது.
எனவே, புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருப்போர். தேசிய அடையாள அட்டைக்கு விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.