( காளிமுத்து சத்தியசீலன் )
இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது.
Just one click and you will never see annoying push notifica…
இந்நிலையில், குறித்த முன்மொழிவு தொடர்பாக கலந்தாலோசிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் ஒன்றுகூடவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 21 நாட்களுக்கு மின்சார கட்டணத்தை திருத்துவது குறித்து பொது மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த 21 நாட்களுக்கு மக்கள் தமது கருத்துக்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க முடியும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.