( NEWS READING REPORTER AKM.MUKSITH KINNIYA )
நாடளாவிய ரீதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதத் தாள்களை கொடுக்கும் நடவடிக்கையை இன்று (22.01.2024) முதல் பொலிஸார் அமுல்படுத்தவுள்ள நிலையில், பேருந்து இயக்கத்தை தவிர்க்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அபராதத் தாள்களை முதல் அனுப்ப பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேருந்துகளின் தவறுகள் தொடர்பான அபராதத் தாள்களை பேருந்தின் உரிமையாளருக்கு அனுப்பி வைப்பது நியாயமற்றது.
பஸ் சங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி பொலிஸார் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்றார்.
பேருந்துகளின் தவறுகள் தொடர்பான அபராதத் தாள்களை பேருந்தின் உரிமையாளருக்கு அனுப்புவது நியாயமற்றது என விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து முன்னுரிமைப் பாதையை நடைமுறைப்படுத்தி, பேருந்துகளை இயக்க முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பேருந்து உரிமையாளர்கள் இந்த முன்மொழிவுக்கு இணங்குவார்கள் என்றார்.