( காளிமுத்து சத்தியசீலன் செட்டிகுளம் )
சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
அதன் பிறகு வேக்சின் தொடங்கி நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்போது கொரோனா கட்டுக்குள் வந்தது. இதற்கிடையே சீன ஆய்வாளர்கள் நடத்தும் மற்றொரு ஆய்வு குறித்து மற்றொரு பகீர் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் எப்ரைட்,
“இந்த ஆய்வில் பின்பற்றப்பட்ட பயோ பாதுகாப்பு குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இது பல கவலைகளை ஏற்படுத்துகிறது. கடந்த 2019 காலகட்டத்தில் இதேபோல ஆய்வை நடத்தி, கொரோனா பரவியிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. ஆராய்ச்சிக்கு அவசியமான குறைந்தபட்ச பயோ பாதுகாப்பு இல்லாமல் நடத்தப்பட்டது பொறுப்பு இல்லாத செயல்” என்று சாடியுள்ளார்.
அதேநேரம் இது புது வகை வைரஸ் எதுவும் இல்லை என்று சொல்லும் பெய்ஜிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மலேசியாவில் கடந்த 2017இல் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் இது என்றும் அதை மட்டுமே தாங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்