கீரி கடற்கரையில் கரையோர சுத்தமாக்கலும் மரநடுகையும்

( Suratha Media Reporter, T. Sivanantharasa Cheddikulam Division – Vavuniya District )

கீரி கடற்கரையில் கரையோரத்தை சுத்தப்படுத்தலும் மரம் நடுகையும் நிகழ்வு 25.01.2024 வியாழக்கிழமை இன்று காலை 7.00 மணிக்கு வர்த்தக வங்கியின் மன்னார் மற்றும் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட செயலக கரையோரம் பேணல் திணைக்கள ஒருங்கிணைப்புடன் வர்த்தக வங்கி அலுவலர்கள், முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், லியோ கழக உறுப்பினர்கள், கிராமமக்கள், தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்பணி. பெப்பி அடிகளார், பட்டித்தோட்டம் கிராம அலுவலர் என அனைவரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

இயற்கையை பாதுகாக்க வேண்டியதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமை என அவரது உரையில் வலியுறுத்திக் கூறியதுடன் மரம் நடுகையிலும் ஈடுபட்டார். மரம் நடுகை நிகழ்விற்கான 100 மரங்களை Green Layer அரச சார்பற்ற நிறுவனம் வழங்கி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *