கச்சக்கொடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமையப்பெற்றுள்ள அரைஏக்கர் அப்துல் முத்தலிப் எகடமி முன் பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புதிய மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வும் 26/01/2024 ம் திகதி காலை 8:30 மணியளவில் முன் பள்ளி மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு முன் பள்ளி முகாமைத்துவ பணிப்பாளரும் கிராம உத்தியோகத்தருமான A.M. அஸ்லம் அவர்களின் தயார்படுத்தலுக்கு அமைவாக முன் பள்ளி ஆசிரியை பாத்திமா ஸியா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு முன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பும் அரங்கேறியது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அந் நஜாத் மகாவித்தியாலய அதிபர் K.கபீர் தி/கிண்/வேப்/ ஸாஹிறா வித்தியாலய ஆசிரியர் K.M சாதிக் ,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் K.M.உவைஸ்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் S.றிஜாத்,
கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் M.M .அபூர்
மற்றும் அந் நஜாத் சமுர்த்தி சங்கத்தலைவரும் சுரத செய்தியாளருமான M.A.M. அஜீத் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வை சுரத ஊடகத்துடைய திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் K.M. முஸாபிர் அவர்கள் தொகுத்து வழங்கியது சிறப்பம்சமாகும்.
சுரத செய்திகளுக்காக Muhammed Ajeeth .M.A