( By. Sathiyaseelan Cheddikulam )
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அவுஸ்ரேலியா சென்றுள்ளார். குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவும் உள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனும் இந்தப் பயணத்தில் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்ட நிலையில், அவரது18ஆவது அதிகாரப்பூர்வ பயணமாக இது உள்ளது.
காளிமுத்து
சத்தியசீலன்