எமது வலய பாடசாலையான T/Kin/Al-Ameen Maha Vid மாணவர்கள் [U-20] Division -11 பிரிவில் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் இன்று Colombo Royal College அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 3 : 0 என்ற கோல் கணக்கில் மகத்தான சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளார்கள்.
இவ்வெற்றியானது உண்மையில் ஓர் சாதனையாகும். குறைந்த வளத்துடனும், மகத்தான துணிவுடனும் செயற்பட்டு இவ்வெற்றியினைப் பதிவு செய்துள்ளார்கள்.
இச்சாதனை வெற்றியினைப் பதிவு செய்த மாணவர்கள்,ஊக்கம் அளித்த ஆசிரியர்கள், அவர்களுக்குப் பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்கள், பிரதி அதிபர், பெற்றோர்கள் அனைத்துக்கும் தலைமைத்துவம் வழங்கிய அதிபர் ஆகியோருக்கு கிண்ணியா சுரத மீடியா சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.