අද කාලගුණය 2024.03.05
දිවයිනේ බොහෝ ප්රදේශවල ප්රධාන වශයෙන් වැසි රහිත කාලගුණික තත්ත්වයක් පවතී. බස්නාහිර සහ සබරගමුව පළාත්වල ඇතැම් ස්ථානවල උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් අපේක්ෂා කෙරේ.
இன்றைய வானிலை 2024.03.05
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலையே காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கியும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.